ஞாயிறு, 6 நவம்பர், 2016

கம்பு தோசை

கம்பு தோசை

தேவையான பொருட்கள்

கம்பு மாவு 1 கப்
மைதா மாவு 2 ஸ்பூன்
உப்பு தேவைகேற்ப..

அரைக்க...
கறிவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு
மிளகு 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் 1 ஸ்பூன்
தக்காளி 1/2 பழம்

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் அரைத்து கொள்ளவேண்டும். பின் மாவுடன் சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைத்து பின் தோசைக்கல்லில் ஊற்றி எடுக்கவும்.

சுவையான சத்தான கம்பு தோசை ஒரு காலை நேர உணவாக பறிமாறலாம்.







சமையலுக்கு உபயோகிக்கும் முக்கிய பொருட்கள்

நல்ல நல்லெண்ணெய்

நெய்

காய்கறிகள் - குளிர் சாதன பெட்டி இல்லாத கடைகளில் தினமும் வாங்கிக்கோள்ளுங்கள்

ஃப்ரீசரில் வைத்த எந்த பொருளும் அரோக்கியத்துக்கு நல்லதல்ல.

 நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்களோ அந்த இடத்தில் விளையக்கூடிய காய், பழங்கள் உங்கள் உணவில் இருந்தால் நலம்.


ஆரோக்கிய உணவுகள்

என் வலை தளத்துக்கு வந்தமைக்கு நன்றி!!!

மன நிலைக்கும் உண்ணும் உணவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்து பார்த்த பின் அதை மற்றவர்களும் பயன் பெரும் விதமாக இங்கே தருகிறேன். 

க்லோரி பார்த்து சாப்பிடுபவர்களுக்கு இந்த உணவு வகைகள் சாப்பிடும் முன் உங்கள் டாக்டரிடம் ஆலோசனை பெற்றபின் சாப்பிடலாம்.

இது சுவைக்காக உடல் ஆரோக்கியத்தை தியாகம் செய்து விட்டு பின் எதேனும் வியாதிக்கு பத்தியம் சாப்பிடும் நிலையில் உள்ளவர்கள் உங்கள் மருத்துவரிடம் கேட்டு பின் சாப்பிடுங்கள்

வீட்டில் செய்து பார்த்து எப்படி இருக்கிறது என்று இங்கே பதிவு செய்யுங்கள்.